திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (07:23 IST)

தமிழகம் தவிர அனைத்து பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது ‘ஜெயிலர்’: தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு தான்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகும் நிலையில் இன்று காலை 6 மணிக்கு தமிழ்நாடு தவிர கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் ரிலீஸ் ஆகிவிட்டது. 
 
தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி தரப்படவில்லை என்பதால் முதல் காட்சி ஒன்பது மணிக்கு தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அண்டை மாநிலமான பெங்களூரில் 'ஜெயிலர்' திரைப்பட ரிலீஸ் ஆனதை அடுத்து தியேட்டரில் பட்டாசு விடத்தை ரசிகர்கள் கொண்டாடினர். 
 
கர்நாடகா மாநிலம் முழுவதுமே இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சியை தொடங்கிவிட்டது. அதேபோல் வெளிநாட்டிலும் இந்திய நேரப்படி ஆறு மணிக்கு பட காட்சி தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்கள் டைட்டில் காட்சியை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இன்னும் ஒரு சில மணி நேரத்தில் முதல் விமர்சனம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு காட்சிகள் தொடங்குவதால் 12 மணிக்கு மேல் ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva