வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 9 ஆகஸ்ட் 2023 (09:47 IST)

தமிழகம் முழுவதும் ஆடி கிருத்திகை கொண்டாட்டம்.. முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!

தமிழகம் முழுவதும் இன்று ஆடி கிருத்திகை கொண்டாட்டம் நடைபெறுவதை அடுத்து முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
குறிப்பாக சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் முருகனை தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் காவடி எடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி கிருத்திகை தினத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 
 
திருத்தணி உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து அனைத்து முருகன் கோவிலிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva