1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 4 மார்ச் 2023 (15:19 IST)

இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

rain
இன்று முதல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவு வருகிறது என்றும் கோடை வெயில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்று முதல் அதாவது மார்ச் 4 முதல் மார்ச் 6 வரை தென் மாவட்டங்களிலும் மார்ச் 7, 8 ஆகிய நாட்களில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran