வெள்ளி, 1 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 3 மார்ச் 2023 (17:43 IST)

தென்மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

கிழக்கு திசைக் காற்றின் மாறுபாடு காரணமாக  தென்மாவட்டங்களில், நாளைக்கு லேசான மழை பெய்யும் என கூறியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது:

3 ஆம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும், சில இடங்களில் இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.

கிழக்கு திசைக் காற்றின் மாறுபாடு காரணமாக  மார்ச் 4ஆம் தேதி, 5 ஆம் தேதிகளில், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிதமான மழை பெய்யக்கூடும்! சில இடங்களில்  குறைந்தபட்ச வெப்பநிலை  இயல்பை விட  3 முதல் 4 டிகிரி குறைவாக இருக்கும்.

வரும் 6 ஆம் தேதி தமிழகம், காரைக்கால் பகுதிகளில் பொதுவான வறண்ட வானிலை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.