1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (07:50 IST)

இன்று முதல் இரவுநேர ஊரடங்கு: விதியை மீறினால் கடும் நடவடிக்கை

இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படவுள்ளதை அடுத்து ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஊரடங்கு நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் குறிப்பிடுகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் ஊரடங்கு தொடங்கியுள்ளதை அடுத்து விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பாக மாஸ்க் அணியாமல் யாரும் வெளியே செல்லக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இரவு நேர ஊரடங்கின்போது பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் ஓட்டுநர், ஓட்டுநர் நடத்துனர் மற்றும் பயணிகள் கண்டிப்பாக கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.