செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (19:50 IST)

’வலிமை’ ரிலீஸில் மாற்றமில்லை: உறுதியாக இருக்கும் போனிகபூர்!

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 
 
திங்கள் முதல் சனி வரை மூன்று காட்சிகள் மட்டுமே திரையரங்குகளில் திரையிடப்படும்  என்றும் அதே போல் ஞாயிறன்று முழுமையாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இருப்பினும் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந் ’வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் எந்தவிதமான மாற்றமும் இல்லை என அவர் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பாக வெளிநாட்டில் உள்ள திரையரங்குகளில் ஏற்கனவே முன்பதிவு தொடங்கிவிட்டது என்றும் எனவே ரசிகர்களை ஏமாற்ற தான் தயாராக இல்லை என்றும் வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.