1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (08:22 IST)

ஃபாஸ்டேக் என்றால் என்ன? இன்று முதல் அமலா? கால அவகாசம் நீட்டிப்பா?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் டிசம்பர் 15 முதல் ஃபாஸ்டேக் முறையை அமல்படுத்தி உள்ளது என்பது தெரிந்ததே. இதற்கான கால அவகாசம் ஜனவரி 15 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் பாஸ்டாக் என்றால் என்ன? என்பது குறித்து தற்போது பார்ப்போம். சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருப்பதும், அதற்காகவே சில நிமிடங்கள் செலவு செய்வதும் இதனால் நேரம் மற்றும் எரிபொருள் வீணாகும் என்பதும் தெரிந்ததே
 
இதனை தவிர்ப்பதற்காக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஃபாஸ்டேக் என்ற ஒரு செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலியை வாகனங்கள் வைத்திருப்பவர்கள் டவுன்லோட் செய்து அதில் வங்கி கணக்கை இணைத்து சார்ஜ் செய்து கொண்டால் உங்களுக்கு என ஒரு பார்கோடு அடங்கிய ஸ்டிக்கர் கொடுக்கப்படும். அந்த ஸ்டிக்கரை உங்கள் வாகனத்தில் உள்ள கண்ணாடியில் ஒட்டிக் கொண்டால், நீங்கள் டோல்கேட்டை கடக்கும்போது சுங்கச் சாவடியில் உள்ள ஆண்டனா அந்த பார்கோட்-ஐ டீகோட் செய்து உங்கள் ஃபாஸ்டேக் கணக்கிலிருந்து கட்டண தொகையை வரவு வைத்துக் கொள்ளும்
 
இதனால் டோல்கேட்டுக்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையை டிசம்பர் 15 க்குள் அனைத்து வாகனங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் இதற்கு ஒரு மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறையை பின்பற்ற ஜனவரி 15 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
புதிய வாகனம் வாங்குபவர்கள் ஃபாஸ்டேக் ஷோரூம்களிலேயே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பழைய வாகனங்கள் வைத்திருப்பவர்கள் இதுவரை ஃபாஸ்டேக் முறையை பின்பற்றவில்லை என்றால் உடனடியாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது