1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. From today commercial cylinder rate reduced

சிலிண்டர் விலை ரூ.76 குறைவு.. ஆனால் இல்லத்தரசிகள் அதிருப்தி..!

gas cylinder
ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டர் விலை குறித்த மாற்றம் அறிவிப்பு வெளிவரும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில் அதில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 76 குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுவரை ரூ.2,268 என விற்பனை ஆகி வந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் இன்று முதல் 76 குறைந்து 2012 ரூபாய் என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு பயன்களுக்கு உபயோகப்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை என்பதால் இல்லத்தரசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இருந்தாலும் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையையும் குறைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு - டிரம்ப் கைது செய்யப்படுவாரா?