நிவர் புயலால் தள்ளிவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடக்கம்!
நிவர் புயலால் தள்ளிவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடக்கம்!
சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுவையை புரட்டி எடுத்த நிவர் புயல் காரணமாக பல்வேறு தேர்வுகளும் கலந்தாய்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன என்பது குறித்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது புயல் கரை கடந்துள்ள நிலையில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மற்றும் கலந்தாய்வுகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன
அந்த வகையில் நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி பொது மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கிய நிலையில் நிவர் புயல் காரணமாக நவம்பர் 29 முதல் நான்கு நாட்களுக்கு கலந்தாய்வு கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் தற்போது மீண்டும் இன்று காலை முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் இந்த கலந்தாய்வுய் டிசம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கும் மருத்து கலந்தாய்வில் மாணவர்கள் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது