ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது: இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம்

தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பதும் அதனை அடுத்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழக சட்டசபை கூடுகிறது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் பட்ஜெட் மீதான தங்களது கருத்துக்களை உறுப்பினர்கள் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று முதல் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக மற்றும் திமுக இடையே காரசாரமான விவாதங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட்டில் இருப்பதாக கருத்துக்கள் எழுந்து வந்துள்ளது