செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (13:34 IST)

இயல், இசை, நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர்! – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் நடிகரும் முன்னாள் வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏவுமான வாகை சந்திரசேகர் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக செயல்படுவார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக தலைவராக இசையமைப்பாளர் தேவா இருந்து வந்த நிலையில் அவரது பதவிக்காலம் முடிவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி தமிழ்நாடு நாட்டுபுற கலைஞர்கள் நல வாரிய தலைவராகவும் வாகை சந்திரசேகர் செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.