1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. From today agni natchathiram starts

இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்: பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுரை

hot
இன்று முதல் அடுத்த 25 நாட்களுக்கு கத்தரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
 
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கத்திரி வெயில் 25 நாட்களுக்கு பொதுமக்களை வாட்டி எடுக்கும் அந்த காலகட்டத்தில் மிக அதிக வெப்பம் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று முதல் கத்தரி வெயில் ஆரம்பம் எனவும் இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் .
 
மேலும் நீர் ஆகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
இஸ்ரேல் நாட்டின் முதல் திருநங்கை கால்பந்து நடுவர்: குவியும் வாழ்த்துக்கள்