1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (07:41 IST)

தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் உள்ள இருபத்திநான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்ததை அடுத்து வாகன உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் திடீரென தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது
 
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்க சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு ரூ 5 முதல் 35 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஒரு சில வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இலகுரக வாகனங்கள் ஐந்து ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் அச்சு வாகனங்களுக்கு ரூபாய் 35 கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
அனைத்து சுங்கச் சாவடிகளிலும் நீக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் திடீரென தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகள் கட்டணம் உயர்ந்து உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது