1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (13:03 IST)

கொள்ளை அடிக்கும் கொடைக்கானல் படகு சவாரி

கொடைக்கானல் தமிழ்நாடு படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் உயர்வால் மக்கள் அதிர்ச்சி. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சில காலம் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதால் சுற்றுலா தளங்களை நம்பி தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படிப்படியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளால் சுற்றுலா தளங்களை மக்கள் மொய்த்து வருகின்றனர். 
 
இந்நிலையில் கொடைக்கானல் தமிழ்நாடு படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரூ.100 கட்டணம் வார நாட்களில் ரூ.150 ஆகவும், வார இறுதியில் ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வரிசையில் நிற்க விரும்பாமல் உடனே படகில் எற விரும்பினால் ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.