கேஸ் விலை உயர்வு : சிலிண்டரை திருமண பரிசாக கொடுத்த நண்பர்கள்

Last Modified திங்கள், 24 செப்டம்பர் 2018 (16:03 IST)
ஒரு திருமண விழாவில் தம்பதிக்கு எரிவாயு சிலிண்டரை திருமண பரிசாக நண்பர்கள் அளித்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

 
தற்போது பெட்ரோல் ரூ.85 ஐ தாண்டியுள்ளது. விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100 ஐ தொடும் என வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், மானிய சமையல் கேஸ் சிலிண்டரின் விலையும் தாறுமாறாக உயர்ந்து ரூ.850 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் 5 லிட்டர் பெட்ரோல் கேனை ஒருவர் திருமண பரிசாக வழங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.
 
இந்நிலையில், அதே கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமக்களுக்கு அவர்களின் நண்பர்கள் கேஸ் சிலிண்டரை பரிசாக கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
 
வித்தியாசமான திருமண பரிசை அளிக்க நினைத்த அந்த நபர், தற்போது கேஸ் சிலிண்டரின் விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு, இந்த பரிசை கொடுத்ததாக கூறப்படுகிறது.
 
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :