திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (17:33 IST)

கடலூரில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் அன்பளிப்பு!

கடலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
இந்தியா முழுவதும் பெட்ரோல், டிசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மத்திய அரசு இதுவரை பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது.
 
பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.