வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (13:26 IST)

கொரோனா எதிரொலி: அடிவாங்கிய தர்பூசணி வியாபாரம் – விவசாயிகள் வேதனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தர்பூசணி வியாபாரம் தடைப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்தும் மாநில எல்லைகளிலேயே தடை செய்யப்படுகின்றன.

தற்போது கோடைகாலம் என்பதால் இந்த காலங்களில் தர்பூசணி வியாபாரம் களைகட்டும் என்பதால் புதுக்கோட்டை வியாபாரிகள் தங்கள் வயல்களில் தர்பூசணி பயிரிட்டுள்ளனர். இங்கு பயிரிடப்படும் தர்பூசணிகள் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தர்பூசணி அறுவடை செய்தாலும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கஜா புயலினால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பிரச்சினையால் தர்பூசணி வியாபாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், இதனால் தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யாமலே வீணாகி வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.