செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 31 மார்ச் 2020 (16:15 IST)

நடிகை ராதிகா ஆப்தேவிற்கு கொரோனா தொற்று? அதிர்ச்சிக்குள்ளாக்கும் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார்.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதிகா ஆப்தே லண்டனை இசைக் கலைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டு  செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் தற்போது தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையிலான மாஸ்க் அணிந்துகொண்டு லண்டன் மருத்துவமனையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதை கண்டவுடன் உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என ஆளாளுக்கு பதறிவிட்டனர். பின்னர் அதற்கு பதிலளித்துள்ள ராதிகா, யாரும் பயப்படவேண்டாம். எனக்கு கொரோனா இல்லை. விரலில் ஏற்பட்டுள்ள சிறிய காயத்திற்காக மருத்துவமனைக்கு வந்துள்ளேன். மேலும், கர்ப்பமான தோழி ஒருவரின் பரிசோதனைக்காக அவருடன் வந்திருக்கிறேன். நான் கொரோனா பரவாமல் இருக்க பாதுகாப்புடன் இருக்கிறேன் என கூறியுள்ளார்.