செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2024 (10:02 IST)

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

Jayakumar
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அம்மா உணவகங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

ஆர்.எஸ்‌.பாரதி போன்ற கார்ப்பரேட் கைக்கூலிகளுக்கு ஒரு நாள் என்பது 24 மணி நேரம்!

பலருக்கு ஒரு நாள் என்பது மூன்று வேளை!

வறுமை-பசி என எதையாவது தங்கள் வாழ்க்கையில் திமுக குடும்பம் உணர்ந்திருந்தால் அம்மா உணவகத்தை மூட வேண்டும் என திட்டமிட்டு மேடைதோறும் முழங்குமா?

அம்மா உணவகம் குறித்த ஆர்.எஸ்.பாரதியின் எண்ணம் திமுகவின் அழிவுக்கான பாதை!

எத்தனையோ இளைஞர்களுக்கு கடினமான நேரத்தில் தாயுள்ளத்துடன் உணவிட்டு பசியாற்றியது அம்மா உணவகம்!

இன்றைக்கு அம்மா உணவகங்கள் அரசின் நிதியின்றி மூடும் நிலையில் உள்ளது.
இதனால் பலர் பசியோடு வாழ்க்கையை நகர்த்தும் அவலத்தில் உள்ளனர்.

இளநீர் இட்லி வாங்கி ருசிக்கும் குடும்பத்திற்கு பசி‌யின் கொடுமை எப்படி புரியும்?

Edited by Siva