புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2024 (07:17 IST)

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் மற்றும் இந்திய சுவிசேஷ திருச்சபை (ECI) பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 86.

கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது, இரு நாட்களுக்கு முன்பு உடல்நிலை மீண்டும் மோசமானதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.30 மணியளவில் அவர் மரணமடைந்தார். எஸ்றா சற்குணத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது மகள்கள் வெளிநாட்டில் உள்ளதால், அவர்கள் வந்தவுடன் இறுதி சடங்கு செப்டம்பர் 26-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva