1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (07:47 IST)

முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரை அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். 
 
அதன் பின்னர் அவரை அரைநிர்வாணப்படுத்தி தாக்கியதாக ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் நேற்று கைது செய்த நிலையில் அவரை சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை அடுத்து அவரை அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை காவலில் வைக்க ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார்
 
இந்த நிலையில் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கள்ள ஓட்டு போட்டதாக குற்றம் சாட்டப்பட்ட திமுக பிரமுகர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கள்ள ஓட்டு போட்டவரை பிடித்து கொடுத்தவவரை சிறையில் அடைந்துள்ளதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது