புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (08:59 IST)

முன்னாள் முதல்வரின் மருமகன் திடீர் மாயம்! ஆற்றில் விழுந்து தற்கொலையா?

முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்எம் கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா என்பவர் திடீரென மாயமானதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
முன்னாள் கர்நாடக முதல்வரின் மருமகன் எஸ்எம் கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தர். இவர் காபி டே' நிறுவனத்தின் உரிமையாளர் என்பது தெரிந்ததே. இவர் நேற்று தனது காரில் மங்களூர் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் பாலத்தில் தன்னை இறக்கி விடுமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை இறக்கி விட்ட டிரைவர் நெடுநேரம் அவருக்காக காத்திருந்து அவர் திரும்பவில்லை
 
இதனால் சந்தேகமடைந்த டிரைவர் சித்தார்த்தை ஆற்றின் பாலத்தில் தேடி பார்த்துள்ளார். ஆனால் அவரை காணவில்லை. இதனால் பதட்டமடைந்த அவர் சித்தார்த்தின் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து சித்தார்த் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
 
சித்தார்த் கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனக்கவலை இருந்ததாகவும் அதனால் அவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஆற்றில் தற்போது அவரை அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது 
 
மருமகனை காணாமல் கவலையில் இருந்துவரும் எஸ் எம் கிருஷ்ணாவிற்கு முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் எஸ்எம் கிருஷ்ணா பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது