வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (16:26 IST)

முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி

நாடு முழுவதும் 15 மாநிலங்களில்,56 மாநிலங்களவை  உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால், அந்த இடங்களுக்கான தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள், நாளையுடன் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில், ராஜ்யசபையின் (மாநிலங்களவை) 56 காலி இடங்களுக்கான தேர்தலுக்காக காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், தேர்தலுக்கான போட்டியில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதில், மத்திய தொழில்நுட்ப இணையமைச்சர் எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து  மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நேற்றைய தினம் பாஜகவில் இணைந்த மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது.