1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 10 பிப்ரவரி 2024 (21:38 IST)

'கணித்தமிழ் மாநாட்டின் 'வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்- முதல்வர்

தலைவர் கலைஞர் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய 'தமிழிணையம்-99' மாநாட்டைத் தொடர்ந்து நமது #DravidianModel அரசு பன்னாட்டுக் #கணித்தமிழ் மாநாட்டை நடத்தியுள்ளது என்று தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''தலைவர் கலைஞர் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய 'தமிழிணையம்-99' மாநாட்டைத் தொடர்ந்து நமது #DravidianModel அரசு பன்னாட்டுக் #கணித்தமிழ் மாநாட்டை நடத்தியுள்ளது.
 
இந்தக் கால் நூற்றாண்டில் இத்துறை அளப்பரிய மாற்றங்களை, வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. Artifical Intelligence, Machine Learning, Natural Language Processing Tools என இன்று இணையம் மொத்தம் பரவியிருக்கும் புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப நம் தமிழ்மொழியைத் தகவமைத்திடும் சிந்தனைகளுக்கு ஊக்கமாக இந்த மூன்று நாள் மாநாடு நடந்தேறியுள்ளது.
 
உலகின் முன்னணி மொழிகளுக்கு இணையான வேகத்தில் தமிழ்மொழியும் தொழில்நுட்பத் துறையில் தடம்பதிக்க வித்திடும் மாண்புமிகு அமைச்சர் 
@ptrmadurai
 அவர்களுக்கு வாழ்த்துகள்! இம்மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்!'' என்று தெரிவித்துள்ளா.ர்