வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (11:39 IST)

அதிமுக முன்னாள் எம்.பி மஸ்தான் காலமானார்: தலைவர்கள் இரங்கல்!

masthan
அதிமுக முன்னாள் எம்.பி மஸ்தான் காலமானார்: தலைவர்கள் இரங்கல்!
முன்னாள் அதிமுக எம்பி மஸ்தான் காலமானதை அடுத்து அவருக்கு அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
அதிமுகவின் முன்னாள் எம்பி மஸ்தான் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.  அவர் இன்று ஊரப்பாக்கம் அருகே காரில் கொண்டிருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது
 
 கடந்து 1995 முதல் 2001 வரை மாநிலங்களவையில் அதிமுக எம்பி ஆக மஸ்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இணைந்த இவருக்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran