வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (14:31 IST)

ஆளுனர் வீட்டு அலமாறியில் மசோதாக்கள்: திமுக எம்பி டி.ஆர்.பாலு

tr balu
திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் வீட்டு அலமாரியில் தூங்கிக் கொண்டிருப்பதாக டிஆர் பாலு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர் 
 
இதனை அடுத்து பாராளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி டிஆர் பாலு பேட்டியளித்தார். அப்போது அவர் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து 23  மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மசோதாக்களை அலமாரிகள் வைத்துக்கொண்டு ஆளுநர் கையெழுத்து போடாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்
 
வளர்ந்த நாடுகளில்கூட ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் பலமுறை எச்சரித்தும் வலியுறுத்தியும் ஆளுநர் மௌனமாக இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இது குறித்து மக்களவையில் குரல் எழுப்பினோம் என்றும் ஆளுநரை திரும்பப் பெற கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் டி ஆர் பாலு இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran