வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (15:38 IST)

செல்பி எடுக்க சென்று காட்டுக்குள் சிக்கிய இளைஞர்: துரத்தி சென்ற காட்டு மிருகம்!

செங்கோட்டை பகுதியில் செல்பி எடுக்க காட்டுக்குள் சென்ற இளைஞரை காட்டு மிருகம் துரத்தியதால் அவர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக – கேரள எல்லைப்பகுதியான புளியரை பகுதி அடர்ந்த மலைக்காட்டு பகுதியாகும். பல்வேறு காட்டு மிருகங்கள் வாழ்ந்து வரும் இந்த பகுதியில் கோட்டயம் பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பவர் தனது நண்பருடன் மோட்டார் வாகனத்தில் பயணித்துள்ளார். செல்பி எடுக்க விரும்பி காட்டு பகுதிக்குள் சென்ற அவர்களை காட்டு மிருகம் ஒன்று துரத்தியுள்ளது.

இதனால் இருவரும் காட்டு பகுதிக்குள் பிரிந்து ஓடியுள்ளனர். அதில் சுமேஷ் வந்த பாதையை மறந்து காட்டிற்குள் சிக்கியுள்ளார். காட்டு மிருகங்களுக்கு பயந்து மரத்தின் மேல் ஏறிய சுமேஷ் செல்போன் மூலம் காவல் நிலையத்தின் உதவியை நாடியுள்ளார். காட்டுக்குள் தேடிய காவல்துறையினர் சுமேஷை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பியுள்ளனர்.

பிறகு அந்த காட்டுப்பகுதியில் வாழும் மக்கள் சுமேஷை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். சுமேஷை கண்டுபிடித்த மக்களுக்கு அவரது பெற்றோர்கள் நன்றி கூறியுள்ளனர்.