1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (07:05 IST)

மயிலாடுதுறையில் 6வது நாளாக பதுங்கியுள்ள சிறுத்தை.. இருக்கும் இடம் கண்டுபிடிப்பு

மயிலாடுதுறையில் கடந்த ஆறு நாட்களாக சுற்றிக் கொண்டிருக்கும் சிறுத்தையை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக இருக்கும் நிலையில் தற்போது சிறுத்தை இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மயிலாடுதுறையில் ஊருக்குள்ள ஒரு சிறுத்தை நுழைந்து விட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊருக்குள் சுற்றி வரும் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், தற்போது ஆறு நாள் ஆகிவிட்ட நிலையில் சிறுத்தை இருக்கும் இடம் கிட்டத்தட்ட கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதையடுத்து விரைவில் சிறுத்தை பிடிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

காவிரி, பழைய காவிரி, மஞ்சலாறு நீர்வழி புதர்களில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து சிறுத்தையை வனத்துறையினர் நெருங்கி விட்டதாகவும் எந்த நேரத்திலும் சிறுத்தை பிடிபடலாம் என்று கூறப்படுகிறது.

மயிலாடுதுறையில் சிறுத்தை பிடிபட்டால் மட்டுமே பொதுமக்கள் அச்சமின்றி வெளியே வர முடியும் என்பதும் பள்ளிகளும் திறக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Siva