ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 21 மே 2024 (15:17 IST)

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

Actress Murder
மைசூரு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நடிகையுமான வித்யா குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். 
 
கர்நாடகா மாநிலம், மைசூர் ஸ்ரீராம்பூரைச் சேர்ந்தவர் நடிகை வித்யா. சிரஞ்சீவி சர்ஜாவின் 'அஜித்' படத்தில் நடித்தவர் வித்யா. அத்துடன் சிவராஜ்குமார் நடித்த ‘பஜ்ரங்கி’ படத்திலும் அவர் நடித்துள்ளார். அது மட்டுமின்றி பல படங்களில் துணை நடிகையாக வித்யா நடித்து வந்தார்.
 
இவர் மைசூருவில் பன்னூர் துர்கானூரில் உள்ள கணவர் நந்தீஷ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நடிகை வித்யா காங்கிரஸ் கட்சியின் மைசூரு நகரச் செயலாளராக  செயல்பட்டு வந்தார். இதன் காரணமாக அவருக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவு அவர்கள் இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
 
இந்த நிலையில், வித்யா தலையில் கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 
கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை வித்யாவை அவரது கணவர் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். தலைமறைவாகியுள்ள நந்தீஷை போலீசார் தேடி வருகின்றனர்.