சிறுத்தை நடமாட்டம் என தகவல்.. பள்ளிக்கு விடுமுறை அறிவித்த மயிலாடுதுறை ஆட்சியர்..!
சிறுத்தை நடமாட்டம் இருப்பது அறியப்பட்டதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக நம் மாவட்ட ஆட்சியர் சற்று முன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள செம்மங்குளம் என்ற பகுதியில் பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளி சில ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில் இந்த பள்ளியின் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சிசிடிவி கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிறுத்தை அந்த பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளதாகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிறுத்தை யாருடைய கண்களிலாவது தென்பட்டால் உடனே 9360889724 என்ற எண்ணுக்கு தகவல் தரலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். சிறுத்தை நடமாட்டம் காரணமாக தனியார் பள்ளி அருகே சிறுத்தை நடமாடுவதாக வெளியாகி உள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva