இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!
தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்னி நட்சத்திரத்தின் தாக்கமே தெரியாத வகையில் கடந்த சில நாட்களாக தட்பவெப்பநிலை மாறி உள்ளது என்றும் சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என்று அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிவித்த 20 மாவட்டங்கள் பின் வருமாறு:
நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர்
Edited by Mahendran