செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 4 ஜூலை 2022 (16:52 IST)

நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகங்கள் அமைக்கப்படுமா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

unavagam
தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என பதிவு செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றின் மீது நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டர் இடைவெளியில் அம்மா உணவகங்கள் அமைக்க வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் முறையான ஆய்வுகளை மேற் கொள்ளாமல் பத்திரிகைகளின் செய்தி அடிப்படையில் வழக்கு தொடர்ந்ததால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது 
 
இதனால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகங்களை அமைக்கப்படுவது இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டு வருகிறது