வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜனவரி 2024 (11:10 IST)

நடுவானில் விமானத்தில் ரகளை...! போதை இளைஞர் கைது..!!

indigo
நடுவானில் விமானத்தில் போதையில் ரகளை செய்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். 
 
பொதுவாக பேருந்து, ரயில், விமானம் போன்ற எந்த பயணமாக இருந்தாலும் குடிபோதையில் அருகில் பயணிக்கும் நபர்களின் செயல்களை கண்டால் நமக்கு கொஞ்சம் கோபம் வரும்.

இவர்களை எல்லாம் ஏன் ஏற்றுகிறீர்கள் என  சக பயணிகள் மல்லுகட்டுவதை பார்த்திருப்போம். சில நேரம் இது கைக்கலப்பில் கூட முடியும். அப்படி ஒரு சம்பவம் தான் நடுவானில் விமானத்தில் நிகழ்ந்துள்ளது.
 
துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது இளைஞர் ஒருவர், குடிபோதையில் விமானத்துக்குள் ரகளை செய்து பெண் பயணிகளை அச்சுறுத்தினார்.

இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் வைத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசாருதீன் (25) என்பதும், குடிபோதையில் ரகளை செய்ததும் தெரிய வந்தது.