செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (17:17 IST)

ரஷ்ய ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? - 74 பேரின் கதி என்ன?

plane crashed
65 பிணைக்கைதிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருந்து 65 உக்ரைன் பிணைக்கைதிகளுடன் ராணுவ விமானம் புறப்பட்டது.
 
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உக்ரைன் எல்லைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. கீழே விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்த வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த விமானத்தில் உக்ரைன் பிணைக்கைதிகள் 65 பேர் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 74 பேர் பயணம் மேற்கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 74 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

 
உக்ரைன் பிணைக்கைதிகளுடன் சென்ற ரஷ்ய விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்தும் ரஷ்ய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.