வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (16:18 IST)

முழு கொள்ளளவை எட்டிய வரட்டு பள்ளம் அணை.. 3 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அந்தியூர் அருகே உள்ள வரட்டு பள்ளம் அணை அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதை அடுத்து  அணை அருகில் உள்ள மூன்று கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது

 இதனை அடுத்து பல அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கூட செம்பரம்பாக்கம் ஏரி உள்பட பல இடங்களில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது

இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள வரட்டு பள்ளம் அணை எந்த நேரமும் அதன் முழு கொள்ளளவை எட்டலாம் என்ற நிலை இருப்பதால் அதிலிருந்து  உபரி   நீர் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே சங்கரா பாளையம், கெட்டி சமுத்திரம், எண்ணமங்கலம் ஆகிய மூன்று கிராம பஞ்சாயத்துகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran