தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை நெருங்குகிறதா?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும், சமீபத்தில் 66,000 ஒரு சவரன் விற்பனையாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதை அடுத்து, 67 ஆயிரத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சென்னையில், தங்கம் ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்த நிலையில், ஒரு சவரன் 160 ரூபாயும் உயர்ந்துள்ளது. இப்போது, சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,310 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 66,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,065 எனவும் ஒரு சவரன் ரூபாய் 72,520 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 114.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 114,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva