வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (19:39 IST)

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கும்: 3 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு

courtralam
குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் இதனால் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
குற்றாலம் பேரருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களில் ஒரு பெண் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 2 பேரை தேடும் பணிகளில் மீட்பு படையினர் தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 குற்றாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக திடீரென பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பேரருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் 3 பேர் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அவருக்கு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது