1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (15:25 IST)

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

கே.ஆர்.பி அணையின் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திருப்பி விடப்பட்டதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 

 
கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் தன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணைக்கு 2 ஆயிரத்து 648 கன அடி நீர் வருகிறது. இன்று கால நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.50 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும்.
 
கே.ஆர்.பி ஆணையில் இருந்து தண்ணீரை அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
மேலும் தாழ்வான பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் என்றும்; ஆற்றை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.