செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2017 (13:09 IST)

தோழி நடிகையின் வீட்டில் ஓய்வு எடுக்கும் ஓவியா....

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியா தற்போது என்ன மனநிலையில் இருக்கிறார் எனவும், அவர் எங்கிருக்கிறார் எனவும் தெரிந்து கொள்ள அவரின் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.


 

 
தன்னுடைய காதலை ஆரவ் ஏற்காததால், மனமுடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் ஓவியா வெளியேறினார். அதன்பின் ஓரிரு நாள் சென்னையில் இருந்தார் ஓவியா. அதன் பின் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், சென்னையிலிருந்து விமானம் மூலம் கேரளா சென்ற அவர், தனது தந்தையிடம் கூறிவிட்டு, தனது நெருங்கிய தோழியும், நடிகையுமான ரம்யா நம்பீசன் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். 


 

 
பீட்சா, சேதுபதி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நடிகை காரில் கடத்தபட்டு, பாலியல் துன்புறுத்துலுக்கு உட்படுத்தப்பட்ட போது கூட, அந்த நடிகை ரம்யா நம்பீசன் வீட்டில்தான் தங்கினார். அவருக்கு ரம்யாதான் ஆறுதல் கூறினார். இந்நிலையில், காதல் தோல்வி கண்டு மனுமுடைந்துள்ள ஓவியாவிற்கும் அவர் ஆறுதலாக இருப்பார் எனத் தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா இருந்த போது, அவருக்கு ஆதரவாக ரம்யா பல கருத்துகளை தெரிவித்து வந்தார் எனப்து குறிப்பிடத்தக்கது.