வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:18 IST)

கன்னியாகுமரியில் வடியத் தொடங்கும் வெள்ளநீர்… இயல்புநிலை திரும்பல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.

சென்னையை அடுத்து மழை வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கன்னியாகுமரி இருந்தது. அங்கு பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இது சம்மந்தமாக இணையத்தில் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகின. இதையடுத்து அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களையும், சீரமைப்பு பணிகளையும் பார்வையிட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து இப்போது மழைக் குறைந்துள்ளதால் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் முழு வெள்ளமும் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.