1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2022 (08:11 IST)

குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு: மெயில் அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு!

courtralam
குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மெயின் அருவியில் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்றும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது
 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவியில் அதிக அளவு தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது
 
இன்றும் பழைய குற்றாலம் ஐந்தருவி புலியருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva