1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2022 (17:08 IST)

பாலாற்றில் வெள்ளபெருக்கு: 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

flood
பாலாற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாலாறு கரையோரங்களில் உள்ள ஏழு கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளன. 
 
மேலும் பாலாறு அணைக்கட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு வினாடிக்கு 1724 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதாகவும் இதன் காரணமாக பாலாற்றங்கரையில் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பாலாற்று கரையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது 
 
Edited by Siva