1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 மே 2024 (11:04 IST)

கள்ளக்காதலனுடன் உல்லாசம்! எட்டி பார்த்த 5 வயது மகளுக்கு தாய் செய்த கொடூரம்!

மதுரையில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்துவிட்ட மகளை தாயே கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே உலகநாதபுரத்தை சேர்ந்தவர் சமயமுத்து. இவருக்கு மலர்செல்வி என்ற பெண்ணுடன் திருமணமாகி 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சமயமுத்து துபாயில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மலர்செல்விக்கு அப்பகுதியை சேர்ந்த தர்மசுந்தர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் கள்ளக்காதலாக இது மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அப்படியாக இருவரும் ஒருநாள் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது மலர்செல்வியின் 5 வயது மகள் கார்த்திகா அதை பார்த்து விட்டார். இதை வெளியே சொல்லிவிடுவாளோ என்று பயந்த மலர்செல்வி, தனது கள்ளக்காதலன் தர்மசுந்தருடன் சேர்ந்து சிறுமி கார்த்திகாவை கிணற்றில் வீசி கொன்றுள்ளார்.


பின்னர் குழந்தையை காணவில்லை என்று நாடகமாடிய அவர் இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது மலர்செல்வி முன்னுக்கு பின் முரணாக உளறியுள்ளார். போலீஸார் கொஞ்சம் கறாராக விசாரித்த நிலையில் குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று விட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மலர்செல்வியையும், தர்மசுந்தரையும் கைது செய்தனர். கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பப்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தையையே தாய் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K