1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 16 மார்ச் 2022 (20:55 IST)

மார்ச் 27 முதல் புதுச்சேரியில் பயணிகள் விமானம்: தமிழிசை தகவல்

மார்ச் 27 முதல் புதுச்சேரியில் பயணிகள் விமானம் இயக்க இருப்பதாக ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
 
மார்ச் 27 ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தின் விமான சேவை துவங்க இருக்கிறது. பல்வேறு கட்ட முயற்சிக்கு பின் இந்த சேவை கிடைக்கப்பெற்றுள்ளது.
அதற்கு நான் பிரதமருக்கும் ,விமான துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன் 
 
புதுச்சேரி வளர்ச்சிக்கு விமான சேவை முக்கியம்.புதுச்சேரி சுற்றுலாதுறை வளர்ச்சியடைவதற்கும் ,புதுச்சேரியொட்டியுள்ள கடலூர் ,நாகை, திருவாரூர் மக்களுக்கு இது உதவிகரமாக அமையும் 
 
புதுச்சேரியில் இருந்து கிளம்பும் முதல் பயணிகள் விமானத்தில் நான் பயணம் செய்ய போகிறேன் என கவர்னர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.