புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (07:37 IST)

திருச்சி விமான நிலையத்தில் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு கிளம்பிய விமானத்தால் பரபரப்பு

திருச்சி விமான நிலையத்தில் சுற்று சுவரை உடைத்து கொண்டு விமானம் ஒன்று பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.20 மணிக்கு திருச்சியிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானியின் கட்டுப்பாட்டை மீறி அந்த விமானம் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு மேலே பறந்தது.

130 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் சுமார் 4 மணி நேர பயணத்திற்கு பின்னர் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதனையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த விமானம் திடீரென கோளாறு ஏற்பட்டது ஏன்? என்று விரிவான விசாரணை நடத்த விமான நிலைய உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்த 130 பயணிகளுக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.