திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:58 IST)

டாய்லெட் பேப்பரை கவனிக்காமல் விமானம் ஏறிய டிரம்ப்

ஷூவில் ஒட்டிய டாய்லெட் பேப்பரை கவனிக்காமல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமானம் ஏறிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவின் மின்னசோடா மாகாணத்தின் மின்னபோலீஸ்-செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறினார். அப்போது அவர் விமான படிக்கட்டில் ஏறியபோது அவரது ஷூவில் வெள்ளை நிறத்தில் ஒன்று ஒட்டிக்கொண்டிருந்ததை கவனிக்காமல் அவர் படியேறி கொண்டிருந்தார். மொத்த படியும் ஏறிய பின்னர் மக்களை நோக்கி கைகாட்டிய பின்னர் அவர் விமானத்தின் உள்ளே சென்றார். அப்போதுதான் அந்த பொருள் டிரம்பின் ஷூவில் இருந்து கீழே விழுந்தது

பின்னர் அந்த வெள்ளை பொருள் டாய்லெட் பேப்பர் என கண்டறியப்பட்டது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதுகுறித்து பலரும் நகைச்சுவையாக டுவீட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.