செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (10:59 IST)

தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடத்திய ஐவர் கைது!

தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடத்திய ஐவர் கைது!
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடத்திய ஐந்து பேரை போலிஸார் கைது செய்துள்ளார்.

சென்னை பல்லாவரம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள குவாலிட்டி இன் ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக பல்லாவரம் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பல்லாவரம் உதவி ஆணையர் ரவீந்தரன் தலைமையில் நடந்த சோதனையில் கிடைத்த தகவல் உண்மை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சந்தோஷ் குமார், சரத்குமார், சக்திவேல், திருமலை மற்றும் குமாரவேல் ஆகியோரை போலிஸார் கைது செய்துள்ளனர்.