ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (07:46 IST)

பன்னுக்கு வரியில்லை, ஜாமுக்கு வரி என்று பேசிய தொழிலதிபர்.. நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு..

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பன்னுக்கு வரவில்லை ஆனால் அதில் தடவும் ஜாமுக்கு வரி என்று காமெடியாக பேசிய தொழிலதிபர் தற்போது அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் கோவையில் நடந்த தொழிலதிபர் உடனான சந்திப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் அதிபர் ஒருவர் நகைச்சுவையாக பேசினார். அதில் பேக்கரியில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு வகையான ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது என்றும் இதன் காரணமாக பில் போடுவதற்கு கம்ப்யூட்டரை திணறுகிறது என்றும் பேசியிருந்தார்.

அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் தற்போது அவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளார். நான் எந்த கட்சியை சேர்ந்தவனும் இல்லை, தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று அவர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

இது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு வகையான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றன. திமுக பிரமுகர் சரவணன் அண்ணாதுரை இதுகுறித்து கூறியபோது, ‘பதவித் திமிர் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது.  இன்னும் எவ்வளவு நாட்கள் தான் என்று பார்ப்போம். ஜிஎஸ்டி வரி விதிப்பில் வேறுபாடு இருக்கிறது சிரமமாக இருக்கிறது என சுட்டிக் காட்டியதற்கு, அவரை வரவழைத்து என்ன சொல்லி மன்னிப்பு கேட்க வைத்தார்களோ!!!



Edited by Siva