செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 11 ஆகஸ்ட் 2021 (19:59 IST)

லாரி மோதி ஒருவர் இறந்ததால் கிராம மக்கள் ஆத்திரம்: 5 லாரிகளுக்கு தீவைப்பு!

லாரி மோதி ஒருவர் இறந்ததால் கிராம மக்கள் ஆத்திரம்: 5 லாரிகளுக்கு தீவைப்பு!
கடலூர் அருகே லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்து காரணமாக ஒருவர் இறந்ததால் ஆத்திரமடைந்த கிராமத்து மக்கள் அந்த வழியாக வந்த லாரிகளை மடக்கி தீ வைத்து அடித்து நொறுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே லாரி ஒன்று மிக வேகமாக சென்ற நிலையில் அந்த லாரி மோதி ஒருவர் அகால மரணம் அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்து மக்கள் அந்த வழியாக சென்ற 5 லாரிகளுக்கு தீ வைத்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது
 
அதுமட்டுமின்றி அந்த வழியாக சென்ற 30 க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அந்த பகுதியில் போலீசார் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர், தற்போது அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.