வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (11:12 IST)

செல்ஃபி மோகத்தால் கூவத்தில் விழுந்த இளைஞர்! – 8 மணி நேரம் கழித்து மீட்பு!

சென்னையில் கூவத்தில் விழுந்த இளைஞரை 8 மணி நேரம் கழித்து மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பிரபல நேப்பியர் பாலத்தின் மீது இரவு 10 மணியளவில் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். செல்ஃபி எடுக்க பாலத்தின் ஓரத்திற்கு சென்ற அவர் தவறி கூவம் ஆற்றில் விழுந்துள்ளார்.

காப்பாற்ற கோரி பல மணி நேரமாக அவர் கத்தியும் பாலத்தில் சென்றவர்களுக்கு கேட்கவில்லை. இந்நிலையில் அதிகாலை 6 மணியளவில் அவ்வழியாக சென்ற காவலர் ஒருவர் கூவத்திலிருந்து சத்தம் கேட்கவும் விரைந்து இளைஞரை மீட்டுள்ளார். இரவு முழுவதும் இளைஞர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆற்றில் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது